Day: October 1, 2021

200ஆவது தொகுதி பிரம்மாஸ் பாகங்களை டெலிவரி செய்த கோத்ரேஜ் நிறுவனம் !!

October 1, 2021

கோத்ரேஜ் நிறுவனத்தின் ஒரு பிரிவான கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ் கடந்த 2001ஆம் ஆண்டு முதலாக பிரம்மாஸ் திட்டத்தில் முக்கியமான பங்காளியாக உள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் 200 தொகுதி பிரம்மாஸ் ஏவுகணை பாகங்களை பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஒவ்வொரு பாகமும் 5000 சின்னஞ்சிறு பாகங்களால் செய்யப்பட்ட 138 பாகங்களை கொண்டவை ஆகும். இதற்கான விழாவில் கோத்ரேஜ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பணியாளர்களை பாராட்டி பேசினர்.

Read More

முக்கிய இடங்களில் பணியாற்றும் வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த எச்சரிக்கை !!

October 1, 2021

உளவுத்துறை அமைப்புகள் முக்கிய இடங்களில் பணியாற்றி வரும் பாதுகாப்பு படை வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன. அதாவது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மொபைல்களை ஹாக் செய்து தகவல்களை பெற முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் தங்களை அடையாளம் காட்டி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவ படைகளுக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் இத்தகைய அறிவுரை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Read More

என்னை இந்திய ராணுவம் நன்றாக கவனித்து கொண்டது சரணடைந்த பயங்கரவாதி வாக்குமூலம் !!

October 1, 2021

சமீபத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட நிலையில் உடன் வந்த ஒருவன் சரணடைந்தான். 19 வயதே நிரம்பிய அவன் தனக்கு 20,000 ரூபாய் சண்டையிட கொடுக்கப்பட்டதாக தன்னை திரும்ப நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளான். மேலும் தன்னை இந்திய ராணுவம் நன்றாக கவனித்து கொண்டதாகவும் தனது தாயிடம் திரும்பி செல்ல விரும்புவதாகவும் கூறினான்.

Read More

இந்தோ பசிஃபிக் பகுதியில் இந்தியா தவிர்க்க முடியாத கூட்டாளி ஃபிரான்ஸ் தூதர் !!

October 1, 2021

இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல்லெனேய்ன் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் எங்களின் தவிர்க்க முடியாத முக்கிய கூட்டாளி இந்தியா என கூறியுள்ளார். முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன, இந்த உறவினை மேலும் அதிகமாக வலுப்படுத்த முடியும் எனவும் கூறிய அவர், இந்தோ பசிஃபிக் பிராந்தியம் எங்களுக்கும் முக்கியமானது இங்கு 20 லட்சம் ஃபிரெஞ்சு மக்கள் வசிக்கின்றனர் மேலும் 7000 ராணுவ வீரர்கள் இங்கு உள்ளனர் என்றார்.

Read More

13,000 கோடி மதிப்பில் தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி !!

October 1, 2021

பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 13,165 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தளவாடங்களை வாங்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி சுமார் 3850 கோடி ரூபாய் மதிப்பில் 25 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 4,962 கோடி மதிப்பில் ராக்கெட் குண்டுகள் வாங்கவும், 7523 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 118 டாங்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 11,486 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்களை உள்நாட்டில் இருந்தே வாங்க உள்ளனர் என்பது […]

Read More

கோவை நிறுவனங்களுடன் இந்திய கடற்படை பேச்சுவார்த்தை !!

October 1, 2021

உள்நாட்டு கொள்முதலில் தன்னிறைவு பெறும் பொருட்டு இந்திய கடற்படை கோவையில் இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 27ஆம் தேதி கோவையில் அமைந்துள்ள ஐ.என்.எஸ் அக்ரானி கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை கொடிஸியா தொழில் முனைவோர் அமைப்பினரும், தளத்தின் கட்டளை அதிகாரி கமோடர் யோகேஷ் பாண்டே, கொச்சி கடற்படை விமான தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் ஐந்து பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விமானம் மற்றும் கப்பல்களுக்கான உதிரி பாகங்கள், […]

Read More

பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா !!

October 1, 2021

ஷாங்காய் ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சிக்காக 3 பேர் கொண்ட குழுவை இந்தியா அனுப்பி வைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தான் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதாக நீண்ட நெடிய யோசனைக்கு பிறகு அறிவித்த கடைசி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

டீ எப்படி இருக்கிறது பாகிஸ்தானை கலாய்த்து தள்ளும் இந்திய நெட்டிசன்கள் !!

October 1, 2021

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற போது 19 வயதான பயங்கரவாதி ஒருவன் சரணடைந்தான் . அவனை ஊடகங்கள் முன் ஆஜர்படுத்திய இந்திய ராணுவம் மேஜை மீது டீ கப் ஒன்றை வைத்திருந்தது. தற்போது இதனை வைத்து இந்திய நெட்டிசன்கள் பாகிஸ்தானை டீ எப்படி இருக்கிறது என கலாய்த்து தள்ளி வருகின்றனர். முன்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிய போது பாகிஸ்தானியர்கள் செய்ததற்கு பழி வாங்கி வருகின்றனர் நமது நெட்டிசன்கள்.

Read More