காஷ்மீர் மக்களுக்காக பேசுவோம்; தாலிபன்கள் திடீர் பல்டி

ஆப்கனை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு அங்கு நடக்கும் விசயங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.இந்நிலையில் தற்போது தாலிபன்கள் காஷ்மீர் மக்களுக்காக பேசுவோம் என கூறியுள்ளனர்.

உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களுக்காகவும் பேசுவோம் காஷ்மிர் உட்பட என தாலிபன்கள் கூறியுள்ளனர்.இதற்கு முன் ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக உபயோகிக்க அனுமதிக்க கூடாது என தாலிபன்களிடம் இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்த தாலிபன்கள் தயாராக இல்லை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர்.

தாலிபன்கள் ஆப்கனை கைப்பற்றியதற்கு வாழ்த்து செய்தி பதிவிட்ட அல் கொய்தா காஷ்மீர் விடுதலைக்கு உதவுமாறு அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.