இந்தியாவுக்கு விண்வெளி தொழில்நுட்பம் தரக்கூடாது என பைடன் எதிர்த்த வரலாறும் நம்பி நாராயணன் வழக்கும் !!

  • Tamil Defense
  • September 26, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு விண்வெளி தொழில்நுட்பம் தரக்கூடாது என பைடன் எதிர்த்த வரலாறும் நம்பி நாராயணன் வழக்கும் !!

கடந்த 1992ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் இருந்து செனட்டராக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு விண்வெளி தொழில்நுட்பம் தரக்கூடாது என கடுமையாக எதிர்த்துள்ளார்.

மேலும் அமெரிக்க அரசும் இந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை தர மறுத்தது, அப்போது இந்தியாவுக்கு ரஷ்யா உதவ முன்வந்தது அதையும் அமெரிக்க அரசு மற்றும் சி.ஐ.ஏ ஆகியவை முடக்க கடுமையாக முயன்றன.

அப்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் தலைமையிலான குழுவினர் இந்தியாவிலேயே சொந்தமாக க்ரையோஜெனிக் என்ஜினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் பொய் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நமது க்ரையோஜெனிக் என்ஜின் திட்டத்தை புரட்டி போட்டது இதனால் பல ஆண்டுகள் தாமதம் ஆனது.

அதே போல சோவியத் ஒன்றியம் உடைந்த காலத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து வந்தது, இதனை வைத்தே ரஷ்யாவை அமெரிக்கா மிரட்டியது.

1992ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபை ரஷ்யா இந்தியாவுடன் ராக்கெட் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டால் சுமார் 24 பில்லியன் டாலர் அளவிலான நிதியை நிறுத்தி விடுவோம் என மிரட்டியது.

ஆனாலும் ரஷ்யா இதற்கெல்லாம் பணியாமல் இந்தியாவுடன் ராக்கெட் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை செய்து கொண்டது அமெரிக்காவுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது.

இதன் பின்னர் தான் கேரள காவல்துறை மற்றும் உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பியூரோ ஆகியவை இணைந்து நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர், இந்த பிரச்சினையில் அன்றை கேரள காங்கிரஸ் முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் அமெரிக்கா நினைத்தபடியே இந்தியாவின் விண்வெளி கனவுகளை புரட்டி போட்டது சரியான நேரத்தில் இந்தியாவின் திட்டம் நடந்தேறி இருந்தால்,

சுமார் 330 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா கணிசமான பகுதிக்கு சொந்தக்கார நாடாக மாறி இருக்கும்.

க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை ராணுவ ரீதியாக பயன்படுத்தி கொள்ள முடியாத நிலையில் இந்தியாவுக்கு அந்த தொழில்நுட்பம் கிடைப்பது ஆபத்தானது என சித்தரித்து அமெரிக்கா செய்த சதிகளின் பிண்ணனி இதுவேயாகும்.