
இந்தியாவின் பல்வேறு ராணுவ மையங்களில் 180 ஆஃப்கன் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் எதிர்காலம் கேள்விக்குறி ஆன நிலையில் மத்திய அரசு சுமார் 6 மாத காலம் விசாவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் தங்களது எதிர்காலம் குறித்து உறுதியான முடிவினை எடுக்க போதிய கால அவகாசம் கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இவர்களில் 140 பேர் கனடா மற்றும் ஐரோப்பா செல்ல பல்வேறு தூதரகங்களில் விண்ணபித்து காத்திருப்பில் உள்ளனர்.
மேலும் பல வீரர்கள் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்க விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில் ஏற்கனவே இங்கு வசிக்கும் ஆஃப்கன் மகாகளுடன் அவர்களை இணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆஃப்கன் வீரர்களுக்கு இந்தியா அந்நாட்டை வலுப்படுத்தும் விதமாக பல ஆண்டுகளாக சென்னை பூனே டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள பயிற்சி மையங்களில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.