
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது, இதில் ஆன்லைன் முலமாக கலந்து கொண்டு பேசிய பாக் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசினார்.
இதற்கு கடும் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பிரதிநிதியான ஸ்நேகா தூபே பேசும் போது பாகிஸ்தான் தலைவர்களுக்கு சர்வதேச அரங்கில் பொய்களை பேசுவது புதிதல்ல எனவும்,
உலகளாவிய ரீதியாக பாகிஸ்தான் பயங்கரவாத நாடு அது தொடரந்து பயங்கரவாதிகளை பயிற்றுவித்து ஆயுதமளித்து வன்முறையை தூண்டி வருவதற்கு பெயர் பெற்றது எனவும் குற்றம்சாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தொடர்ந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக திகழும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதே போல இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா பேசும் போது பாகிஸ்தான் உடனடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என குறிப்பிட்டார்.