டான்போ நிறுவனத்துக்கு பல உபயோக பார்வை கருவிகளுக்கான ஆர்டரை வழங்கிய இந்திய ராணுவம் !!

  • Tamil Defense
  • September 19, 2021
  • Comments Off on டான்போ நிறுவனத்துக்கு பல உபயோக பார்வை கருவிகளுக்கான ஆர்டரை வழங்கிய இந்திய ராணுவம் !!

டான்போ இமேஜிங் நிறுவனமானது இரவு பார்வை கருவிகள் வெப்ப உணர் கருவிகள் போன்றவற்றை தயாரிப்பதில் உலக பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை அமெரிக்கா ஃபிரான்ஸ் இஸ்ரேல் உள்ளிட்ட 2 டஜன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்திய ராணுவமும் தற்போது டான்போ தயாரிப்புகளை வாங்கி வருகிறது, இதன் தொடர்ச்சியாக தற்போது பல உபயோக பார்வை கருவிகளுக்கான ஆர்டரை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது.

இந்த கருவியை தலைக்கவசம் மற்றும் துப்பாக்கியிலும் தேவைக்கேற்ப கழற்றி பொருத்தி பயன்படுத்தி கொள்ள முடியும், வெறும் 300 கிராம் எடையுடன் மிகவும் இலகுவாக இருக்கும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

தற்போது உடனடி கொள்முதல் அடிப்படையில் இவை வாங்கப்பட உள்ளன, அதன்படி தற்போது இத்தகைய 600 கருவிகளுக்கான ஆர்டர் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 100 கோடி எனவும் இந்த கொள்முதல் காலாட்படை இயக்குனரகம் வழியாக நடைபெறுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.