காஷ்மீரின் உரி அருகே ராம்பூர் செக்டாரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய மூன்று பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் போட்டுத் தள்ளியுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர்.போட்டுத் தள்ளிய பயங்கரவாதிகளிடம் இருந்து ஐந்து AK-47 துப்பாக்கிகள், எட்டு பிஸ்டல்கள் மற்றும் 70 கிரேனேடுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
இது தவிர பாகிஸ்தான் நாட்டு ரூபாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தவிர இன்று பந்திபோராவின் ஹாஜின் பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.