உள்நாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் நிறைவு !!

  • Tamil Defense
  • September 20, 2021
  • Comments Off on உள்நாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் நிறைவு !!

ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தக்கூடிய நாக் வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையான “ஹெலினா”வின் சோதனைகள் நிறைவு பெற்று அங்கீகார சான்றிதழுக்காக காத்திருப்பில் உள்ளது.

ஏவு கருவி மற்றும் ஏவுகணை தற்போது தயாராக உள்ளது மேலும் மனிதர்கள் மற்றும் கருவிகள் இணைந்து செயலாற்றும் சில தொழில்நுட்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளன அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும்,

தற்போது ஒரு ஹெலினா ஏவுகணையின் விலை ஒரு கோடி என்ற நிலையில் முதல்கட்டமாக 40 ஏவு கருவிகளும் 500 ஏவுகணைகளும் வாங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன எனவும்

விரைவில் விமானப்படையின் கோரிக்கைக்கு ஏற்ப இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களில் ஹெலினா ஏவுகணையை இணைத்து பயன்படுத்தும் வகையில் முயற்சிகள் துவங்கும் இந்த ஏவுகணை ஏற்றுமதிக்கு உகந்தது எனவும் மூத்த விஞ்ஞானி முனைவர். சூத் கூறினார்.