2023ஆம் ஆண்டு பறக்க தயாராகும் சுதேசி தேஜாஸ் மார்க்-2 விமானம் !!

  • Tamil Defense
  • September 16, 2021
  • Comments Off on 2023ஆம் ஆண்டு பறக்க தயாராகும் சுதேசி தேஜாஸ் மார்க்-2 விமானம் !!

தேஜாஸ் மார்க்-2 விமானத்தின் டிசைன் இறுதி செய்யபட்ட நிலையில் முதல்கட்ட தயாரிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக விமான மேம்பாட்டு முகமையின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இந்த தேஜாஸ் மார்க்-2 விமானமானது அடுத்த வருடம் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்து 2023ஆம் ஆண்டு பறக்கும் என விமான மேம்பாட்டு முகமை மற்றும் தேஜாஸ் மார்க்-2 திட்ட இயக்குனரான கிரீஷ் தியோதரே தெரிவித்தார்.

தேஜாஸ் மார்க்-2, மார்க்-1 விமானத்தை விடவும் நீண்ட தூரம் பறக்கவும், கனரக ஆயுதங்களை சுமக்கவும் ஏற்ற வகையில் சற்றே பெரிதாக இலகுரக விமானமாக இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த விமானத்தால் சுமார் 6,500 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமக்க முடியும் ஆனால் மார்க்-1 ரக விமானத்தால் 3,500 கிலோ எடையை தான் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.