
டோனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர் ஜாண் போல்டன் ஆவார்.
இவர் அமெரிக்க அரசின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வீழ்ச்சி மற்றும் தாலிபான்களின் எழுச்சிக்கு சரியாக திட்டமிடப்படாத படை விலக்கலே காரணம் எனவும்,
இந்த தாலிபான்கள் பாகிஸ்தான் நாட்டின் உதவியுடன் அணு ஆயுதத்தை பெறும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆக்கஸ் ஒப்பந்தத்தை பாராட்டிய அவர் இஸ்ரேலுக்கு தனது பாதுகாப்பு கருதி செயல்பட முழு உரிமை உள்ளதாகவும் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது முன்னெச்சரிக்கை கருதி தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு உரிமை உள்ளதாகவும் கூறினார்.