
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வான்பரப்பில் பறக்கக்கூடாது என தாலிபான்கள் கூறியுள்ளனர்.
மேலும் அதை மீறி பறந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்காவுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா தோஹா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச விதிகள் என அனைத்தையும் மீறி தன் போக்கில் செயல்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.
இதற்கு அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலடியும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.