
கோவை நகர் அருகே அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்தில் 100ஆவது டோர்னியர் விமானத்தின் சர்வீஸ் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த நேரத்தில் அதிக விமானங்களை எவ்வித தர குறைபாடும் இன்றி சர்வீஸ் செய்துள்ள காரணத்தால் விமானப்படையின் திறன்களும் குன்றாமல் தொடர்ந்து இயங்க முடியும்.
இந்த சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சி ஆர் மோகன் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெகுவாக பாராட்டினார்.