இந்திய பிரம்மாஸ் ஏவுகணையை போல் காட்சியளிக்கும்தென்கொரிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை !!

  • Tamil Defense
  • September 18, 2021
  • Comments Off on இந்திய பிரம்மாஸ் ஏவுகணையை போல் காட்சியளிக்கும்தென்கொரிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணை !!

சமீபத்தில் தென்கொரியா ஒரு சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையை தயாரிக்க உள்ளதாக அறிவித்து மாதிரி படத்தை வெளியிட்டது.

இந்த படத்தில் அந்த ஏவுகணையை பார்ப்பதற்கு இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பு சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மாஸை போல உள்ளது.

திட எரிபொருள் மோட்டார் மற்றும் திரவ எரிபொருள் ராம்ஜெட் என்ஜினை கொண்டதாகவும் இடைமறிக்க கடினமானதாகவும் அதிக வேகத்துடன் பறக்க கூடியது எனவும் கூறப்படுகிறது.

இவை அனைத்துமே தென் கொரிய விஞ்ஞானிகள் பிரம்மாஸ் ஏவுகணையை பற்றி விரிவாக ஆராய்ந்து இருக்கலாம் என உணர்த்தக்கூடிய வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.