
கடந்த 2005ஆம் ஆண்டு இந்திய தரைப்படையின் மலையேறும் குழு ஒன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சட்டோபந்த் சிகரத்தின் மீது ஏறிக்கொண்டு இருந்தது.
அப்போது துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அனீஷ் தியாகி எனும் வீரர் காணாமல் போனார் அவரின் உடல் கிடைக்காமலேயே இருந்தது.
இந்த நிலையில் தற்பொது மீண்டும் இதே சிகரத்தின் மீது இந்திய தரைப்படையின் மலையேறும் குழு ஏறும்போது அனீஷ் தியாகி காணாமல் போன இடத்திற்கு சற்று தொலைவில் ஒரு உடல் கிடைத்தது.
அந்த உடலை சோதித்த வீரர்கள் அனீஷ் தியாகி காணாமல் போன போது உடுத்தியிருந்த உடையை கண்டு உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அப்போது அது வீரர்கள் அனீஷ் தியாகியின் உடல் தான் என உறுதி செய்த பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் மலையேறிய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவரது உடலை காஸியாபாத்தில் உள்ள வீட்டிற்கு ராணுவம் அனுப்பி வைத்தி நிலையில் ஆட்சியர் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் மரியாதை செய்யப்பட்டது.