
தில்லி காவ்ல்துறையினர் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் 2 பாகிஸ்தான் பயிற்சி பெற்ற 6 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்படி உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் கைபற்றப்பட்டன.
இதன் மூலமாக பயங்கர நாசவேலை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஸீஷான் கமார், ஒசாமா, ஜன் முஹம்மது அலி ஷேக், மொஹம்மது அபு பக்கர், மொஹம்மது அமீர் ஜாவேத் மற்றும் மூல் சந்த் லாலா ஆகியோர் தான் அந்த பயங்கரவாதிகள் ஆவர்.
இவர்களில் மூல் சந்த் லாலா தான் நிழல் உலக தாத தாவூத் இப்ராஹீமின் சகோதரன் அனீஸ் இப்ராஹீமுடைய ஆயுத கடத்தல்காரன் என்பது குறிப்பிடத்தக்கது.