தொலைதூர வான் இலக்கு ஏவுகணை ருத்ரம்-3 அடுத்த ஆண்டு சோதனை !!

  • Tamil Defense
  • September 25, 2021
  • Comments Off on தொலைதூர வான் இலக்கு ஏவுகணை ருத்ரம்-3 அடுத்த ஆண்டு சோதனை !!

கடந்த ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் ருத்ரம்-3 ஏவுகணையை சுகோய்30 விமானத்தில் இணைத்து சோதனை செய்வதற்கான டென்டர் ஒன்றினை வெளியிட்டது.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ருத்ரம்-3 ஏவுகணையை சுகோய்30 விமானத்தில் இணைப்பதற்கான பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் சோதனை கட்டத்தை நோக்கி நகரந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக அடுத்த ஆண்டு ருத்ரம்-3 ஏவுகணையின் சோதனைகள் நடைபெறலாம் எனவும் இதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 20 லிமிடெட் சீரீஸ் ஏவுகணைகளை தயாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூத்ரம்-3 ஏவுகணையின் தாக்குதல் வரம்பு சுமார் 550 கிலோமீட்டர்கள் ஆகும் இது ஒரு தொலைதூர வானிலக்கு ஏவுகணை ஆகும், இதன் முந்தைய வடிவங்களான ருத்ரம்-2 மற்றும் ரூத்ரம்-2ஏ ஆகியவை முறையே 250 மற்றும் 350 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பினை கொண்டவை ஆகும்.

ரூத்ரம்-1, ரூத்ரம்-2, ரூத்ரம்-2ஏ மற்றும் ரூத்ரம்-3 ஆகிய நான்கு ஏவுகணைகளும் இந்திய விமானப்படையின் அனைத்து எதிர்கால போர் விமானங்களாலும் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.