ரெட் அலர்ட்; காஷ்மீரில் அதிகமாக ஊடுருவும் வெளிநாட்டு பயங்கரவாதிகள்

  • Tamil Defense
  • September 6, 2021
  • Comments Off on ரெட் அலர்ட்; காஷ்மீரில் அதிகமாக ஊடுருவும் வெளிநாட்டு பயங்கரவாதிகள்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா ,குப்வாரா,பந்திபோரா போன்ற மாவட்டங்களில் உள்நாட்டு பயங்கரவாதிகளை விட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அதிக அளவு ஊடுருவியுள்ளனர்.இது நமது பாதுகாப்பு படைகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதன் மூலமாக அதிக தாக்குதல் நடக்கலாம் என்ற எண்ணத்தில் காவல் துறையினர் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் நடமாட்டங்களை குறைத்துள்ளனர்.

வடக்கு காஷ்மீர் பகுதியில் உள்நாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 11 ஆக இருக்கும் போது வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 40-50ஆக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளின் தெற்கு காஷ்மீரை விட தற்போது தான் வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்றும் இதற்கும் ஆப்கன் பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காவல் துறை கூறியுள்ளது.

2020ல் 32 வெளிநாட்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் வீழ்த்தியுள்ளனர்.ஆனால் இந்த வருடம் ஒன்பது வெளிநாட்டு பயங்கரவாதிகள் தான் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் மொத்தமாக 102 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.இவர்களின் பெரும்பான்மையானோர் கமாண்டர்கள் என காவல்துறை கூறியுள்ளது.