ராஜஸ்தானில் விமான ஒடுதள தரத்தில் புதியசாலை விரைவில் திறப்பு !!

  • Tamil Defense
  • September 7, 2021
  • Comments Off on ராஜஸ்தானில் விமான ஒடுதள தரத்தில் புதியசாலை விரைவில் திறப்பு !!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் விமான ஒடுதள தரத்திலான புதிய நெடுஞ்சாலை விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று இந்த சாலையில் தரையிறங்கி தரத்தினை உறுதி செய்யும்.

அந்த விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பயணிக்க உள்ளனர்.

ஏற்கனவே ஆக்ராவில் இத்தகைய சாலை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜஸ்தானில் இது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இரண்டு சாலைகள் ஆந்திர மாநிலத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன, மேலும் இரண்டு இறுதிகட்ட பணிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.