
இந்த மாதம் 24ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் முதல் முறையாக க்வாட் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் நேரடி சந்திப்பு நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் உளாளிட்டோர் அமெரிக்கா செல்ல உள்ளனர், அவர்களை வரவேற்க அதிபர் பைடன் மற்றும் வெள்ளை மாளிகை நிர்வாகம் தயாராகி வருகிறது.
இந்த சந்திப்பின் போது க்வாட் தலைவர்கள் தங்களது முதலாவது ஆன்லைன் வழி சந்திப்புக்கு பிறகான முன்னேற்றங்களை ஆராய உள்ளனர் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.