
மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி குறித்து க்வாட் உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன அதன்படி அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டுமென வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து கூட்டாக பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மியான்மரில் ஆசியான் அமைப்பின் ஐந்து குறிப்பு தீர்மானம் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர்கள் அங்கு நடைபெற்று வரும் வன்முறை முடிவுக்கு வர வேண்டும் எனவும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
கடந்த ஃபெப்ரவரி மாதம் 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியை கைபற்றி பலரை சுட்டு கொண்று ஆங் சாங் சுகி உள்ளிட்ட 3400 பேரை சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.