இன்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்திற்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலை வெடிகுண்டு மூலம் தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கப்பல் கட்டுமான தள அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் கொச்சி நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதை தீவிர புகாரின் தன்மையை கருத்தில் கொண்டு மத்திய புலனாய்வு அமைப்புகளும் தங்களது நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளனர்.
நாட்டிலேயே முதல்முறையாக கட்டபட்ட விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தை அடுத்த வருடம் படையில் இணைக்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.