எல்லை நிலவரம் குறித்து காஷ்மீர் மக்கள் அச்சப்பட தேவையில்லை ராணுவ கமாண்டர் அறிவிப்பு !!

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமூல்லா மாவட்டத்தில் செய்தியாளர்களை தரைப்படையின் 15ஆவது கோர் படைப்பிரிவு தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் பாண்டே சந்தித்து பேசினார்.

அப்போது அவர் எல்லையோரம் நடக்கும் அத்துமீறல்கள் ஊடுருவல்கள் ஆகியவை சிறிய அளவிலான சம்பவங்கள் ஆகும்.

அத்தகைய சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழு அளவில் எந்த நேரமும் தயாராக உள்ளது ஆகவே காஷ்மீர் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.

முன்னதாக ராணுவ நல்லெண்ண பள்ளி ஒன்றில் மாணவ செல்வங்களின் வசதிக்காக 10 டிஜிட்டல் வகுப்பறைகளை லெஃப்டினன்ட் ஜெனரல் பாண்டே திறந்து வைத்தார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.