
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் குப்வாரா மாவட்டம் தாங்தார் செக்டாரில் அமைந்துள்ள டித்வால் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர் இந்த சண்டை ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் படையினரின் இந்த அத்துமீறிய தாக்குதலில் இந்திய தரப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.