அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் தாலிபான்கள் உறவு முக்கிய இடம் பிடிக்கும் எர தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு துவங்கி 45 நிமிடங்கள் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் தாலிபான்களுடன் ஆஃப்கனில் இருந்தது.
பாகிஸ்தான் தீவிர ஆதரவு அளித்து வரும் ஹக்கானி குழுவின் சிராஜூதீன் ஹக்கானி ஆஃப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது போன்ற சம்பவங்களை சுட்டி காட்டி
தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கு இடையேயான உறவுகளை அம்பலபடுத்த இந்தியா விரும்புகிறது.
ஆனால் இதற்கு அமெரிக்க அரசு போதிய நடவடிக்கையை எடுக்காது என்பது பலரின் கருத்தாகவே உள்ளது.