
எல்லா வருடமும் பனிக்காலத்தின் போது பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் எல்லை வழியாக ஊடுருவுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஊடுருவலை துவங்கி விட்டதாக கூறப்படுகிறது, இதற்கு அடையாளமாக ஊடுருவல்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து உள்ளது குறிப்பிடப்படுகிறது.
கடந்த சில நாட்களில் இரண்டு பயங்கரவாத குழுக்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர், அவர்களிடம் அதிக அளவில் பயங்கர ஆயுதங்களும் இருப்பது தெரிய வருகிறது.
முதல் ஆபரேஷனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து சுமார் 5 ஏகே47 துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் கைபற்றப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆபரேனில் ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்ட நிலையில் மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர், இவர்களிடம் இருந்தும் பயங்கர ஆயுதங்கள் கைபற்றப்பட்டு உள்ளன .