தாலிபான் தலைவர்கள் மற்றும் இம்ரான் கான் இடையே மோதல் பேச்சு !!

  • Tamil Defense
  • September 25, 2021
  • Comments Off on தாலிபான் தலைவர்கள் மற்றும் இம்ரான் கான் இடையே மோதல் பேச்சு !!

கடந்த புதன்கிழமை அன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் ஆஃப்கானிஸ்தான் பொம்மை அரசு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.

இந்த பேச்சு தாலிபான்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் தாலிபான் செய்தி தொடர்பாளர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது பாகிஸ்தான் ராணுவத்தின் பொம்மையாக தான் இம்ரான் கானும் அவரது நிர்வாகமும் உள்ளது, அந்நாட்டு மக்களில் பெரும்பாண்மையானோர் அவர்கள் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர் எனவும்,

பாகிஸ்தான் பிற நாடுகளின் உள் விவகாரங்களை பற்றி பேசுவதையோ அல்லது மூகாகை நுழைப்பதையோ அடியோடு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எங்கள் அரசை பற்றியோ அல்லது எங்கள் நிர்வாகத்தை பற்றியோ யாரும் பேச வேண்டாம் நாங்கள் எந்தவித உதவியையும் ஆட்சியமைக்க பெறவில்லை எனவும் கூறியதாக நயா தாவ்ர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.