பாஞ்ச்ஷீர் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை ட்ரோன்கள் குண்டுவீச்சு !!

  • Tamil Defense
  • September 6, 2021
  • Comments Off on பாஞ்ச்ஷீர் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை ட்ரோன்கள் குண்டுவீச்சு !!

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களுக்கு எதிரான கடைசி கோட்டையாக இருந்து வரும் பாஞ்ச்ஷீர் பள்ளதாக்கு பகுதி மீது தாலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானப்படையின் ஆளில்லா விமானங்களும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சமாங்கன் பாராளுமன்ற உறுப்பினரான ஜியா அரியன்ஜாத் இந்த குண்டுவீச்சில் அதிநவீன ஸ்மார்ட் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பல முக்கிய தாலிபான் எதிர்ப்பு தலைவர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.