
பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் வழக்கமான பயிற்சியின் போது மர்தான் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி விமானத்தில் இரண்டு விமானிகளும் இறந்துவிட்டதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதமும் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான மற்றொரு போர் பயிற்சி விமானம் அட்டோக் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது ஆனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.