அக்னி-5 ஏவுகணை சோதனை வதந்தி, DRDO தலைவர் மறுப்பு !!
1 min read

அக்னி-5 ஏவுகணை சோதனை வதந்தி, DRDO தலைவர் மறுப்பு !!

அக்னி-5 ஏவுகணையின் சோதனை நடத்தப்பட உள்ளதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது, ஆனால் இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் முனைவர் சதீஷ் ரெட்டி மறுத்துள்ளார்.

மேலும் அவர் பேசும் போது அடுத்த 20-30 நாட்களில் அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை என கூறினார்.

அக்னி-5 ஏவுகணை 50 டன் கொண்டது, இந்த ஏவுகணை சுமார் 1500 கிலோ எடை கொண்ட அணு ஆயுதம் அல்லது வழக்கமான வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.