
பிரம்மாஸ் அடுத்த தலைமுறை ஏவுகணையானது 2023ஆம் ஆண்டு சோதனை செய்யப்படும் எனவும் அது உலகின் மிக வேகமான வானிலிருந்து ஏவப்படும் க்ருஸ் ஏவுகணையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகளை பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் துவங்கி உள்ளதாகவும் லக்னோவில் தனது புதிய தொழிற்சாலைக்கு இடம் தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது சொந்த தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் தான் முதலில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணை பொருத்தப்படும் எனவும், தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்தின் பிரதான கப்பல் எதிர்ப்பு ஆயுதமாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது உலகின் முதலாவது மாக் 3.5 வேகத்தில் செல்லும் வானிலிருந்து ஏவப்படும் க்ருஸ் ஏவுகணையாக இருக்கும், இதன் காரணமாக ஒரு சிறிய தேஜாஸ் படையணி கூட மிகப்பெரிய கடற்படை படையணியை முடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஏவுகணையை இடைமறிப்பது சாத்தியமில்லை என கூறப்படுகிறது, 1.5 டன் எடை கொண்ட பிரம்மாஸ் ஏவுகணை 3.5 மாக் வேகத்தில் சென்று 3000 முதல் 6000 டன் எடை கொண்ட கப்பலை தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மிகப்பெரிய வலிமை வாய்ந்த கடற்படையை வைத்து கொள்ள முடியாத சிறிய நாடுகளுக்கு இந்த ஏவுகணை வரப்பிரசாதமாக திகழும் ஆகவே இதனை ஏற்றுமதியும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.