
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் டிஃபன் பாக்ஸ் வெடி குண்டுகள் அம்மாநில காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன, இது தொடர்பாக மூன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த டிஃபன் பாக்ஸ் குண்டுகள் ட்ரோன்கள் மூலமாக பாகிஸ்தான் பஞ்சாப் வழியாக இந்திய பஞ்சாப் பகுதிக்கு கடத்தப்படுகின்றன, காலிஸ்தான் புலிகள் படையும் இதில் தொடர்புடைய அமைப்பாகும்.
இந்த வருடம் மட்டுமே தேசிய பாதுகாப்பு படையின் தேசிய வெடிகுண்டு தரவுகள் மைய அதிகாரிகள் ஒரு டஜன் முறை பஞ்சாப் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
500 முதல் 700 கிராம் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஒரு டிஃபன் பாக்ஸ் குண்டால் சுமார் பத்து மீட்டர் தொலைவுக்கு பலத்த சேதத்தை விளைவிக்க முடியும் என கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு பிறகான காலகட்டத்தில் மட்டுமே வாரத்திற்கு ஒரு வெடிகுண்டு கைபற்றப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கும் தகவல் ஆகும்.