ப்ராஜெக்ட் வேதா பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியாவின் மர்ம ஏவுகணை திட்டம் !!

சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி அவரது அலுவலகத்தில் இருந்து அளித்த பேட்டியில் ஒரு மர்ம ஏவுகணை தென்பட்டது.

அவரது அலுவலகத்தில் இருந்து அந்த ஏவுகணை மாதிரி இதுவரை எங்கும் தென்படாத கேள்விபடாத முற்றிலும் புதிய ஏவுகணையாக இருந்தது இதற்கு வேதா என்ற பெயரும் இருந்தது.

சிலரின் கருத்துப்படி இது புதிய வகை செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்னும் சிலர் இது 5000 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட எதிரி பலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை என சொல்லப்படுகிறது.

இதற்கான சரியான பதிலுக்கு சில காலம் நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.