இந்தியாவின் கல்யாணி குழுமம் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக பிரங்கி ஒன்றை வடிவமைத்துள்ளது.
கருடா-105 என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரங்கி ஒரு 4×4 வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் இது 105மிமீ பிரங்கி ஆகும்.
360 டிகிரி கோணத்தில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இதனை எந்த பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ள முடியும்,
எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி விட்டு உடனடியாக மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று அங்கிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது குறிப்பாக மலைப்பகுதியில் பயன்படுத்த ஏற்றதாகும்.
ஆக மற்றொரு தரமான உள்நாட்டு தயாரிப்பு இந்திய பாதுகாப்பு படைகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.