
கார்கில் போருக்கு பிறகான காலகட்டத்தில் இந்திய தரைப்படையின் பிரங்கி படைப்பிரிவு சுமார் 3000 முதல் 3700 பல்வேறு வகையான பிரங்கிகளை படையில் இணைக்க மாபெரும் திட்டம் ஒன்றை வகுத்தது.
இந்த திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏடாக்ஸ் மற்றும் தனுஷ் ஆகிய பிரங்கிகள் முக்கிய இடமா பிடித்தன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே மிகப்பெரிய தடைகளாக மாறி உள்ளன, காரணம் ஏடாக்ஸ் அனைத்து தர சோதனைகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
தனுஷ் பிரங்கியோ தயாரிப்பு தரத்தில் பல்வேறு குளறுபடிகளை கொண்டுள்ளது, ஆனால் எம்777 மற்றும் கே9 வஜ்ரா ஆகியவை மட்டுமே பலனளித்துள்ளன.
இதன் காரணமாக 2025-2027 வாக்கில் புதிய பிரங்கிகளை படையில் இணைக்க விரும்பும் தரைப்படையின் திட்டம் பெரிய சிக்கலை எதிர்நோக்கி உள்ளது.