இந்திய கடற்படை டிஆர்டிஓ தயாரிப்பு கடற்சார் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளது.ட்ரோன்களால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இந்த அமைப்பு தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மற்றும் AESA DDR ஆகியவற்றை BEL நிறுவனம் தயாரித்து இந்திய கடற்படைக்கு வழங்கும்.

சிறிய ட்ரோன்களை கூட கண்டறிந்து செயலிழக்கச் செய்யக் கூடியது மற்றும் லேசரை அடிப்படையாக கொண்ட அழிக்கும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.
கடற்படை தவிர இராணுவம் மற்றும் விமானப்படையும் பெல் நிறுவனத்துடன் இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.
இந்தியாவிலேயே மேம்படுத்தப்பட்ட ஒரு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு படைகளில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.