
சமீபத்தில் சுதேசி தயாரிப்பான ஆம்கா விமானத்தின் டிசைன் இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில்,
தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானமானது சுமார் 25 டன்கள் எடை கொண்டதாகவும்,
1000 கிலோ உள்பகுதி சுமை திறனும் 5,500 கிலோ வெளிபகுதி சமை திறனும், 6500 கிலோ எரிபொருள் சுமைதிறனும் கொண்டதாக இந்த விமானம் இருக்கும்.
இந்த விமானம் மார்க்-1 மற்றும் மார்க்-2 என ஸ்டெல்த் மற்றும் நான்-ஸ்டெல்த் என இரு வடிவங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தயாரிப்பு பணியில் தனியார் நிறுவனங்கள் சிறப்பு திட்ட அடிப்படையில் சேர்க்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.