
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் ஐ.என்.எஸ். தேகா கடற்படை தளம் அமைந்துள்ளது இது இந்திய கடற்படையின் கிழக்கு கட்டளையகத்தின் தலைமையகம் ஆகும்.
இந்த தளத்தில் மிக்29கே போர் விமானத்தின் சிமுலேட்டர் கிழக்கு கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிமுலேட்டர் உதவியுடன் கடற்படை போர் விமானிகள் மிக எளிதாக பயிற்சி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நமது கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகளுக்கு மேலும் பன்மடங்கு வலு சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.