
தெற்கு காஷ்மீரின் குல்கம் பகுதியில் காஷ்மீர் காவல் துறை வீரர் மீது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்தார்.
இதற்கு முன் இதே போல ஒருவீரரை பயங்கரவாதி தாக்கியதில் மூன்று குண்டு காயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு பின்பு அவர் வீரமரணம் அடைந்தார்.
உயிரிழந்த வீரர் பந்தூ சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது தப்பியோடிய பயங்கரவாதியை தேடும் பணி தொடங்கியுள்ளது காவல்துறை.