காபூலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தில்லியில் கைது செய்யப்பட்டவன் – ஐ.எஸ் கொரஸான் !!

  • Tamil Defense
  • September 21, 2021
  • Comments Off on காபூலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தில்லியில் கைது செய்யப்பட்டவன் – ஐ.எஸ் கொரஸான் !!

ஐ.எஸ். கொரஸான் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆஃப்கன் தலைநகர் காபூலில் கடந்த மாதம் தங்களது இயக்கம் சார்பில்,

அப்தூர் ரஹ்மான் லோகாரி என்பவன் தற்கொலை படை தாக்குதலை நடத்தியதாகவும் அவன் ஐந்து வருடங்கள் முன்பு இந்திய தலைநகர் தில்லியில் கைது செய்யப்பட்டு ஆஃப்கனுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முடிவு செய்து இந்தியா வந்து கைதாகிய அவன் பின்னர் பல வருடங்களாக காத்திருந்து கடந்த மாதம் தனது லட்சியத்தை அடைந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை இதுவரை இந்திய அரசு ஏற்று கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.