அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற எல்லை காவல் சாவடிகள் கட்டுவதில் தோல்வி, ஒப்பந்தம் ரத்து !!

  • Tamil Defense
  • September 20, 2021
  • Comments Off on அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற எல்லை காவல் சாவடிகள் கட்டுவதில் தோல்வி, ஒப்பந்தம் ரத்து !!

இந்தோ திபெத் எல்லை காவல்படை லடாக்கில் ஐந்து வருடங்கள் முன்பு அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற காவல்சாவடிகளை கட்ட முடிவு செய்து,

சுமார் 20 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தேசிய கட்டுமான திட்ட கார்ப்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனத்திடம் வழங்கியது ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நிறைவு அடையவில்லை.

கல்வான் பிரச்சினைக்கு பிறகு எல்லையோர நடவடிக்கைகளை முடுக்கி விட்ட இந்தோ திபெத் எல்லை காவல்படை தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மற்றொரு புதிய பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனத்திடம் இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க கோரி அணுகி உள்ளது.

மேலும் ஒழங்காக பணிகளை முடிக்காத காரணத்தால் இந்தோ திபெத் எல்லை காவல்படை தேசிய கட்டுமான திட்ட கார்ப்பரேஷனுக்கு பாதி பணத்தை வழங்க மறுத்துள்ளதாக தெரிகிறது.