இந்தியாவின் முதல் அணுஏவுகணை ட்ராக் செய்யும் கப்பல் படையில் இணைகிறது

  • Tamil Defense
  • September 3, 2021
  • Comments Off on இந்தியாவின் முதல் அணுஏவுகணை ட்ராக் செய்யும் கப்பல் படையில் இணைகிறது

இந்தியாவின் முதல் அணு ஏவுகணைகளை கண்காணித்து ட்ராக் செய்யும் கப்பலை வரும் செப்டம்பர் 10 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாட்டிற்கு அற்பணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

த்ருவ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை நமது ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் டிஆர்டிஓ மற்றும் National Technical Research Organisation (NTRO) உடன் இணைந்து கட்டியுள்ளது.த்ருவ் கடற்படுகளைகளை கூட மேப் செய்து எதிரியின் நீர்மூழ்கிகளை கூட கண்டறிய வல்லது ஆகும்.

இந்தியாவின் ரகசிய Strategic Forces Command (SFC) உடன் இணைந்து இந்திய கடற்படை வீரர்கள் இந்த கப்பலை இயக்குவர்.பிரான்ஸ்,அமெரிக்கா,இங்கிலாந்து , இரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவும் தற்போது இதுபோன்ற கப்பலை கட்டியுள்ளது.

10000டன்கள் எடையுடன் இந்த கப்பலின் கட்டுமானம் மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தியாவை நோக்கி ஏவப்படும் அணு ஏவுகணைகளை கண்டறிந்து உடனடியாக தகவலை வழங்க கூடியது.இது இந்தியாவின் எதிர்கால பலிஸ்டிக் எதிர்ப்பு அமைப்பிற்கு இதயமாக விளங்கும்.

தற்போது சீனா மற்றும் பாக் என இரு நாடுகளுமே அணு ஏவுகணைகளை கொண்டுள்ளன.எதிரிகள் தங்களது பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்யும் போது அவற்றின் உண்மை திறனை குறித்து அறியவும் இந்த கப்பல் பயன்படும்.

த்ருவ் கப்பலில் டிஆர்டிஓ தயாரிப்பு AESA ரேடார் உள்ளது.