இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் உபயோகிக்க அனுமதிக்க கூடாது என தாலிபன்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அவர்கள் இந்தியா தாலிபன் சந்திப்பு குறித்து பேசுகையில், ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக உபயோகிக்க வாய்ப்புள்ளது குறித்து கவலை தெரிவித்ததாக கூறியுள்ளார்.
கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் மற்றும் தாலிபன் தலைவர் செர் முகமது அப்பாஸ் சந்தித்து கத்தாரில் பேசியுள்ளனர்.மேலும் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றதாக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆப்கனில் மீதமுள்ள இந்தியர்கள் மீட்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பக்சி அவர்கள், காபூல் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இந்த விசயம் குறித்து பேசப்படும் என கூறியுள்ளார்.