
க்வாட் தலைவர்கள் மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸை சந்தித்து பேசினார்.
அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி இருவரும் பேசிக்கொண்ட நிலையில் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்தும் பேசினர்.
வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா இதுகுறித்து பேசும் போது பிரதமர் மோடி எல்லை தாண்டிய பாக் பயங்கரவாதம் குறித்து விவாதித்ததாகவும்,
அதற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் நல்ல முறையில் பதில் அளித்தாகவும் பயங்கரவாதம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்க பாதுகாப்பிற்கும் பேராபத்து என கூறியதாகவும் தெரிவித்தார்.