
இந்தியா சொந்தமாக தயாரித்த அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக தயாரிப்பு நிலையை எட்டியுள்ளது.
இந்திய போர் விமானங்கள் இந்த ரக ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்த முடியும் குறிப்பாக தேஜாஸ் மட்டுமே இத்தகைய இரண்டு ஏவுகணைகளை சுமந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ஏவுகணைகள் முந்தைய தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகளின அதே திறன்களை கொண்டிருக்கும்.
ஆனால் அவற்றின் அளவு சிறியதாக இருக்கும், அதாவது சுமார் 50% எடை குறைவாகவும் 3 மீட்டர் குட்டையாகவும் இருக்கும் இதனால் தான் போர் விமானங்களால் இவற்றை சுமக்க முடிகிறது.