
நேற்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஒமான் நாட்டிற்கு மூன்று நாள் சுற்றுபயணமாக சென்றுள்ளார்.
அங்கு தனது ஒமான் சகாவான ரியர் அட்மிரல் சயீஃப் பின் நாசர் பின் மொஹ்சென் அல் ராஹ்பி மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.
மேலும் அவர் ஒமான் ராணுவத்தின் தலைமை தளபதி வைஸ் அட்மிரல் அப்துல்லா காமிஸ் அப்துல்லாஹ் அல் ரைஸி, தரைப்படை தளபதி மேஜர் ஜெனரல் மத்தார் பின் சலீம் பின் ரஷீத் அல் பலூஷி, விமானப்படை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் காமிஸ் பின் ஹமாத் பின் சுல்தான் அல் காஃப்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
பின்னர் முவாஸ்கர் அல் முர்தஃபா ராணுவ முகாம், கடல்சார் பாதுகாப்பு மையம், சையத் பின் சுல்தான் கடற்படை தளம், அல் முசன்னா விமானப்படை தளம் மற்றும் ஒமான் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகிய முக்கிய இடங்களையும் பார்வையிட உள்ளார்.
இந்த சுற்று பயணத்தின் நோக்கம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ராணுவ ஒத்துழைப்பினை அதிகரிப்பதாகும் என இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் மாத்வால் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.