குஜராத் மாநிலத்தை ஒட்டிய கடல்பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ் ராஜ்ரத்தன் எனும் கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது அல்லா பவாவாக்கல் என்று பாகிஸ்தானிய படகு ஒன்று இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்தததை கண்டுபிடித்த நிலையில் உடனடியாக சென்று அத்னை மடக்கி சோதனை நடத்தியது.
அந்த பாகிஸ்தானிய படகில் 12 பாகிஸ்தானியர்கள் இருந்தனர், அவர்களை கைது செய்த கடலோர காவல்படையினர் படகையும் பறிமுதல் செய்து குஜராத் மாநிலம் ஒகாவிற்கு கொண்டு சென்றனர்.