தற்போது க்வாட் தலைவர்கள் மாநாட்டிற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதையடுத்து இரண்டு முக்கிய பயணங்கள் தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் அமெரிக்கா சென்று தனது சகாவான கால்லின் காஹ்ல் மற்றும் உயர் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளை சந்தித்து ஆயுத ஒப்பந்தங்கள் கூட்டு பயிற்சிகள் குறித்து பேச உள்ளார்.
அவரை தொடர்ந்து கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தனது தற்போதைய ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா செல்ல உள்ளார்.
அங்கு தனது அமெரிக்க சகாவான கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மைலியை சந்தித்து எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஆஃப்கானிஸ்தான், இந்தோ பஸிஃபிக் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி பேச உள்ளார்.
மேலும் இந்த வருடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்று
முறையே தங்களது சகாக்களான லாய்டு ஜே ஆஸ்டின் மற்றும் ஆந்தனி ப்ளிங்கன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும் இது குளிர்கால பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்னர் அல்லது பின்னர் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.