
இந்திய விமானப்படைக்கு 56 Airbus C295MW ஸ்ரேடஜிக் நடுத்தர எடைதூக்கி இராணுவ விமானங்கள் வாங்க கேபினட் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் செயல்பாட்டில் உள்ள அவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக படையில் இணைக்கப்பட உள்ளது.
16 விமானங்கள் பறக்கும் நிலையிலேயே ஸ்பெயினில் இருந்து நேரடியாக தருவிக்கப்படும்.
அடுத்த 40 விமானங்கள் இந்தியாவின் டாடா க்ரூப் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
அனைத்து விமானங்களிலும் நமது தயாரிப்பு Electronic Warfare Suite இணைக்கப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்தான முதல் 48 மாதத்தில் ஏர்பஸ் நிறுவனம் 16 விமானங்களையும் டெலிவரி செய்யும்.
டாடா நிறுவனம் மற்ற 40 விமானங்களையும் பத்து வருடத்தில் டெலிவரி செய்யும்.