ஸ்கைஸ்ட்ரைக்கர் அமைப்பை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்; இதன் திறன் என்ன ?

  • Tamil Defense
  • September 3, 2021
  • Comments Off on ஸ்கைஸ்ட்ரைக்கர் அமைப்பை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்; இதன் திறன் என்ன ?

இந்தியாவின் ஆல்பா டிசைன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இஸ்ரேலின் எல்பிட் நிறுவனமும் இணைந்த நிறுவனமான ALPHA-ELSEC நிறுவனத் தயாரிப்பான SkyStriker Loitering Munition இந்திய இராணுவம் தற்போது ஆர்டர் செய்துள்ளது.100+ அமைப்புகளை தற்போது ஆர்டர் செய்துள்ளது.

தற்போது அவசரமாக இந்த ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த ஆயுதங்கள் இந்திய இன்பான்ட்ரி படைப் பிரிவுகளுக்கு வழங்கப்பட உள்ளது.18 மாதங்களுக்குள் இந்த அமைப்புகள் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்படும்.

இதற்கு முன் 2010ல் இஸ்ரேலிடம் இருந்து இது போன்ற Harop loitering munition ஆர்டர் செய்யப்பட்டது.

இந்த SkyStriker அமைப்பு முழுவதும் தனித்து இயங்க கூடியது.இத இலக்கை கண்டறிந்து அதனை சுற்றி பறந்து தாக்க கூடியது.இதில் உள்ள எலக்ட்ரிகல் புரோபல்சன் காரணமாக இது எதிரிகளுக்கு குறைவாகவே அகப்படும்.இதன் காரணமாக இரகசிய ஆபரேசன்களுக்கு இதை உபயோகிக்கலாம்.

மேலும் இது அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது ஆகும்.ஒரு தற்கொலை இயந்திரம் என்றே கொள்ளலாம்.