அவசரமாக 100 ஸ்வார்ம் ட்ரோன்களை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்

  • Tamil Defense
  • September 4, 2021
  • Comments Off on அவசரமாக 100 ஸ்வார்ம் ட்ரோன்களை ஆர்டர் செய்துள்ள இந்திய இராணுவம்

உலகத் தர மேம்பாடுகளோடு ஒன்றிப் போகும் வகையில் இந்திய இராணுவம் ஸ்வார்ம் ட்ரோன்களை ஆர்டர் செய்துள்ளது.ஐம்பது ட்ரோன்கள் வீதம் இரு ஸ்வார்ம் ட்ரோன்கள் படை ஆர்டர் செய்துள்ளது.

25கிமீ தூரத்தில் உள்ள எதிரி இலக்குகள் மீது கூட்டாக சென்று தாக்குதல் நடத்தக்கூடியவை இந்த ஸ்வார்ம் ட்ரோன்கள்.ஐம்பது ட்ரோன்கள் ஒரு இலக்கை குறிவைத்து சென்று குழுமி தாக்குவதை கற்பனை செய்து பார்த்தாலே இந்த ஆயுதத்தின் திறனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளை கூட இவை தாக்கியழிக்க வல்லவை.பெங்களூருவில் உள்ள ஒரு இந்திய நிறுவனத்திடம் இருந்து இந்த ட்ரோன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து முதல் பத்து கிகி அளவிலான வெடிபொருள்களை சுமந்து சென்று இந்த ட்ரோன்கள் எதிரிகளின் இலக்குகள் மீது தொடர் தாக்குதலை நடத்தும்.இது தவிர எல்லையில் முன்னனி பகுதியில் உள்ள வீரர்களுக்கு மெடிக்கல் சப்ளை போன்றவற்றை கொண்டு சேர்க்கவும் உதவும்.

இந்த ட்ரோன்களின் செயல்பாடு போன இராணுவ தின அணிவகுப்பின் போது செய்து காட்டப்பட்டது.மேலும் இந்த ட்ரோன்கள் எதிரியின் டேங்குகள் மற்றும் கவச வாகனங்களை தாக்கியழிக்கவும் இந்த ட்ரோன்கள் உபயோகப்படும்.